இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துவிட்டதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பறிபோய்விட்டது.
இந்தியா- இங்கிலாந்து மோதும் மற்றொரு லீக் போட்டி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீராங்கனை வியாட் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணித் தரப்பில் அனுஜா பாட்டீல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராதா யாதவ், பூணம் யாதவ், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்திய அணி ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவுடன் இரு போட்டிகளிலும், இங்கிலாந்துடன் ஒரு போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது என்ற சூழ்நிலையில், இத்தொடரில் ஒரு வெற்றியையாவது பதிவு செய்யும் நோக்கில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


