டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை: தமிழக ரசிகர்களின் பாசம் குறித்து ஹர்பஜன் சிங் உருக்கம்!

அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே, இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்...

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 5:10 am

எழில்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்குத் தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ட்விட்டரில் கூறியதாவது: 

நான் சரியானவன் அல்ல. சில நேரங்களில் முட்டாள் தனமான செய்திகளும் சொல்வது உண்டு. தேவை அற்ற நேரங்களில் சிரிப்பதும் உண்டு. சற்று வேடிக்கையானவன் தான், ஆனாலும் நிறம் மாறுவது இல்லை. என்னை விரும்பினாலும் வெறுத்தாலும் நான் ஒரு சத்தியம் செய்கிறேன். நான் உங்களை விரும்புகிறேன். அருமை. தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது. உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே, இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.