எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை, கோவை அணிகள் வெற்றி பெற்றன.
லியா கைப்பந்து கழகம் சார்பில் கனரா வங்கி கோப்பைக்கான 15வது ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில கைப்பந்து போட்டிகள் பகல் இரவு ஆட்டங்களாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.
ஆண்களுக்கான போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, சென்னை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 35க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் கேரள வாலி அணியும், கோவை தடாகம் சி.வி.சி. அணியும் மோதின. இதில் 3:1 என்ற புள்ளி கணக்கில் கோவை அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. சென்னை தாம்பரம் அணியும், திருச்சி பிஷப் ஹீபர் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் 2:0 என்ற புள்ளி கணக்கில் சென்னை தாம்பரம் அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.சீனிவாசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல அலுவலக கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் காந்தி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கனரா வங்கி சுழற்கோப்பையை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!
குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

