ஷார்ஜாவில் நடக்கவுள்ள டி 10 கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான், முனாப் பட்டேல், பிரவீண்குமார், பத்ரிநாத், ஆர்.பி.சிங் உள்ளிட்டோர் பல்வேறு அணிகள் சார்பில் பங்கேற்று விளையாடுகின்றனர்.
ஜகார்த்தா ஆசியப்போட்டி ஹெப்டதலானில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மனின் 6 விரல்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட 7 காலணிகளை அவருக்கு அடிடாஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
மே.இ.தீவுகளின் மூத்த வீரர்கள் தேசிய அணிக்காக விளையாட மறுப்பது அவமானகரமான விஷயமாகும் என முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் சாடியுள்ளார்.
குவைத்சிட்டியில் நடைபெற்று வரும் 11-ஆவது ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் திங்கள்கிழமை இந்திய வீரர் திவ்யன்ஷிங் 10 மீ. ஏர் ரைபிள் ஜூனியர் பிரிவில் வெள்ளி வென்றார். மகளிர் பிரிவு 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வளரிவன் வெண்கலம் வென்றுள்ளார்.
ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக கட்டாக்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஆரோஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் ஷில்லாங் லஜோங் எப்சி அணியை வென்றது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய-மே.இ.தீவுகள் முதல் டி20 ஆட்டத்தை மணி அடித்து தொடங்கி வைக்க முன்னாள் கேப்டன் அஸாருதீனை கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்கால் அழைத்ததற்கு கெளதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்,
ரஷியாவின் கன்டிமான்சிஸ்க்கில் நடைபெற்று வரும் மகளிர் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.ஹரிகா இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். கொனேரு ஹம்பியும் ஏற்கெனவே 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். பத்மினி ரெளட் போராடி தோல்வியுற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







