இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுவதுமாகத் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி (0-2), அடுத்ததாக வங்கதேச அணியிடமும் முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது.
சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி, 324 ரன்களும் மே.இ. அணி 246 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் முன்னிலை பெற்றபோது வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 125 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் மே.இ. அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முயன்றால் அடையக்கூடிய இலக்கு தான். ஆனால் மோசமான பேட்டிங்கினால் தனது 2-வது இன்னிங்ஸில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மே.இ. அணி. 4 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் என தொடக்கமே மோசமாக அமைந்ததால் அதிலிருந்து மே.இ. அணியால் மீள முடியாமல் போனது. இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
முதல் இன்னிங்ஸில் 167 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த மோமினுல் ஹக், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், நவம்பர் 30 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உள்கட்சி விவகாரத்தை விட்டு, தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை ஏற்றுக்கொள்க: மாணிக்கம் தாகூர்!

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


