இந்தியாவுடன் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களுக்கான மேற்கிந்திய தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை.
திங்கள்கிழமை இரு தொடர்களுக்கான அணிகளை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில் பிராவோ, பொல்லார்ட் ஆகியோர் டி20 தொடர் அணியில் இடம் பெறுவர். காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படாத நிலையில், டி20 தொடரில் அவர் இடம் பெறுவார்.
15 பேர் அணியில் சுனில் நரேன் இடம் பெறவில்லை. புதிதாக சந்தர்பால் ஹேம்ராஜ், பேபியன் ஆலன், ஓஷன் தாமஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் தொடருக்கு ஜேசன் ஹோல்டரும், டி20 தொடருக்கு பிராத்வொயிட்டும் கேப்டன்களாக செயல்படுவர்.
அணிகள் விவரம்: ஒரு நாள் தொடர்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரீஸ், தேவேந்திர பிஷு, சந்தர்பால் ஹேம்ராஜ், ஷிம்ரன் ஹெட்மயர், ஷேய் ஹோப், அலிஸரி ஜோசப், எவின் லெவிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பவல், கீமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஓஷன் தாமஸ்.
டி20 தொடர்: கார்லோஸ் பிராத்வொயிட் (கேப்டன்), பேபியன் ஆலன், பிராவோ, ஷிம்ரன் ஹெட்மயர், எவின் லெவிஸ், ஓபெட் மெக்காய், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், கேரி பியரி, பொல்லார்ட், ரோவ்மன்பவல், தினேஷ் ராம்தின், ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஓஷன் தாமஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









