இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்திய ஒருநாள் அணியில் பிருத்வி ஷா?

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பிருத்வி ஷா இடம்பெறவில்லையென்றாலும்...

News image
Updated On :17 அக்டோபர் 2018, 5:57 am

எழில்

டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதோடு அதிவிரைவாகவும் ரன்கள் சேர்த்ததால் இளம் வீரர் பிருத்வி ஷாவை இந்திய ஒருநாள் அணியில் சேர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. 

அடுத்த வருடம் உலகக் கோப்பை நடைபெறுவதையொட்டி, முக்கிய வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. இதனால் மே.இ. அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் வீரர் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள், விராட் கோலி, ரவி சாஸ்திரி, ரஹானே ஆகியோர் இடம்பெற்றார்கள். 

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பிருத்வி ஷா இடம்பெறவில்லையென்றாலும் அடுத்த மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் அவர் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அறியப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

இதுவரை விளையாடிய 22 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் (உள்ளூர் 50 ஓவர் ஆட்டங்கள்) 938 ரன்கள் எடுத்துள்ளார் பிருத்வி ஷா. சராசரி - 42.33, ஸ்டிரைக் ரேட் - 115.37. மூன்று சதங்களும் ஐந்து அரை சதங்களும் எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - மே.இ. அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 2 டெஸ்டுகளில் 237 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.