10,000 ரன்கள்: நாளைய ஆட்டத்தில் உலக சாதனை நிகழ்த்துவாரா விராட் கோலி?

ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 81 ரன்கள் எடுத்தால் போதும், புதிய சாதனை நிகழ்த்திய வீரராகிவிடுவார் விராட் கோலி...
10,000 ரன்கள்: நாளைய ஆட்டத்தில் உலக சாதனை நிகழ்த்துவாரா விராட் கோலி?

ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 81 ரன்கள் எடுத்தால் போதும், புதிய சாதனை நிகழ்த்திய வீரராகிவிடுவார் விராட் கோலி. அவர் அதற்காக 54 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை.

அதிவிரைவாக 10,000 ஒருநாள் ரன்களை எடுத்த வீரர் என்கிற பெருமை இன்றுவரை சச்சினுக்கு உண்டு. 259 இன்னிங்ஸில் 10,000 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். 11 வருடம் 103 நாள்களில் இதை எட்டியுள்ளார். 263 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார் கங்குலி. 

இந்நிலையில், இதுவரை 204 இன்னிங்ஸில், 9919 ஒருநாள் ரன்கள் எடுத்துள்ளார் கோலி. சச்சினை விடவும் 54 இன்னிங்ஸ் குறைவாவே விளையாடியுள்ளார். இதனால் நாளையோ அல்லது அடுத்து வரும் ஆட்டங்களிலோ 10,000 ரன்களை எட்டும்போது புதிய சாதனை படைத்தவராக இருப்பார் கோலி.

5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் குவஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அபாரமாக ஆடி 106 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய இந்தியா 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 326 ரன்களை எடுத்து வென்றது. ரோஹித் சர்மா 152, கோலி 140 ரன்களைக் குவித்தனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டணத்தில் நாளை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com