நடாலிடம் தோற்றதைத் தன்னால் மறக்கமுடியாது என டொமினிக் தீம் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற இருவருக்கும் இடையிலான போட்டியில், முதல் செட்டை 6-0 எனத் தோற்ற நடால், அரும்பாடுபட்டு 5 செட்களில் போராடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கடைசி செட்டை டை பிரேக்கருடன் முடிக்கும் யு.எஸ். ஓபன் விதிமுறைகள் மட்டும் அமலில் இல்லாமல் இருந்திருந்தால் கடைசி செட் பல மணி நேரம் நீண்டிருக்கும். ரசிகர்களுக்குப் பெரிய அளவில் விருந்து படைத்த இந்தக் காலிறுதிச் சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினி தீம் நடாலுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார்.
முதல் செட்டை ஒரு கேம் கூட வெல்லாமல் இழந்தார் நடால். ஒருநாள் முன்பு தான் ஃபெடரரின் தோல்வியைக் கண்ட ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்தது. ஆனால் சாம்பியன்களை அவ்வளவு சீக்கிரம் வீழ்த்தமுடியாது என்பது மீண்டும் நிரூபணமானது.
தனது உத்திகளை மாற்றிக்கொண்ட நடால், முதல் செட்டில் செய்த தவறுகளை வெகுவாகக் குறைத்தார். இதனால் அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என வென்று முன்னிலை பெற்றார் நடால். ஆட்டம் கை நழுவிப் போவதை உணர்ந்த தீம், அடுத்த செட்டில் ஆக்ரோஷமாக விளையாடினார். டை பிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை 7-6 என வென்று சமநிலைக்குக் கொண்டுவந்தார் தீம்.
கடைசி செட். வாழ்வா சாவா என்கிற நிலைமை.
ஏஸ் நிறைய அடித்துத் திணறடித்தாலும் முதல் செட் போல கடைசி செட்டில் தீமால் ஆதிக்கம் செலுத்தமுடியாமல் போனது. கடும் போட்டி மனப்பான்மையுடன் இருவரும் விளையாடி அற்புதமான டென்னிஸ் ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள். 4 மணி நேரம் 49 நிமிடங்கள் வரை நடைபெற்ற கடைசி செட்டை 7-6 என வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் நடால். இரவில் ஆரம்பித்த ஆட்டம் அதிகாலை 2.04 மணிக்கு நிறைவடைந்தது.
இந்தத் தோல்வி குறித்து டொமினிக் தீம் கூறியதாவது:
என் நினைவில் இந்தத் தோல்வி எப்போதும் நிற்கும். காலத்துக்கும் என்னால் இதை மறக்கமுடியாது. டென்னிஸ் ஒரு குரூரமான ஆட்டம். இந்தப் போட்டியில் ஒருவர் தோற்பது நியாயமல்ல. ஆனால் ஒரு வெற்றியாளர் இருந்துதானே ஆகவேண்டும்.
கடைசி செட் டைபிரேக்கர் வரை சென்றது. அதிலும் 50/50. அவர் என்னை விடவும் ஒரு புள்ளி அதிகமாகப் பெற்றார்.
ஆட்டம் முடிந்தபிறகு என்னிடம் மன்னிப்பு கோரினார் நடால். அவர் என்னிடம் மன்னிப்பு கோரவேண்டியதில்லை. நான் யாரிடமும் தோற்க விரும்புவதில்லை. ஆனால் தற்போது அவர் பட்டத்தை வெல்லவேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


