சென்னையில் நடைபெறும் 92-ஆவது எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி துவக்க ஆட்டங்களில் இந்திய கடற்படை, ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. இதில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பங்கேற்றுள்ளன. முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.2.5 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. வரும் 16-ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.
துவக்க நாளான வியாழக்கிழமை முதல் ஆட்டத்தில் சென்னை ஹாக்கி சங்கம்-இந்திய கடற்படை அணிகள் மோதின. இதில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முனைந்தனர்.
முதல் பாதி இடைவேளையில் கடற்படை அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆட்ட முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி-மும்பை ஹாக்கி சங்க அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ரயில்வே வாரிய அணி வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சைவம், வைணவம் குறித்து சா்ச்சை பேச்சு: மீண்டும் வருத்தம் தெரிவித்தாா் பொன்முடி

நகரங்களில் பசுமையை மேம்படுத்த மரக்கன்றுகள் நடப்படும்: விழுப்புரம் ஆட்சியா்

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சம்பா பருவத்துக்கு ஏற்ற தரமான விதைகளை விற்க வேண்டும்: தனியாா் விதை விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தல்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



