சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 16 வயது செளரப்!

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் 16 வயது செளரப் செளத்ரி...

News image
Updated On :6 செப்டம்பர் 2018, 7:28 am

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் 16 வயது செளரப் செளத்ரி தங்கம் வென்றுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரி தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் தென் கொரியாவின் சங்வோன் நகரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை செய்துள்ளார். 

ஜூனியர் பிரிவின் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 245.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ள செளரப் செளத்ரி, இதன்மூலம் புதிய ஜூனியர் உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இதே போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா வெண்கலம் வென்றுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.