இந்திய டெஸ்ட் அணியில் கடந்த சில வருடங்களாக முரளி விஜய்யும் அஸ்வினும் இடம்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் கூடுதலாக மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து 56 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள் என தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பெருமையடைந்தார்கள். கடைசியாக 1961-ல் மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிரிபால் சிங், மில்கா சிங், விவி குமார் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள். அதன்பிறகு பெங்களூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் மூன்று தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள்.
இதற்கு முன்பு இந்திய அணி பங்கேற்ற நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் என மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள். அந்தப் போட்டியின் இரு முக்கியமான விருதுகள் தமிழ்நாட்டு வீரர்களுக்கே வழங்கப்பட்டன. இறுதிச்சுற்றில் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் ஆனார். 18 வயது வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். மூவருமே அந்தப் போட்டியின் 5 ஆட்டங்களிலும் விளையாடி தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.
இதனால் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக ரசிகர்கள் மகிழ்ந்திருந்த வேளையில், லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் ஒரு தமிழ்நாட்டு வீரருக்கும் இடமில்லை. முதல் இரு டெஸ்டுகளில் மோசமாக விளையாடியதால் முரளி விஜய் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்றாலும் 3-வது டெஸ்டிலிருந்து அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். கடந்த நான்கு டெஸ்டுகளிலும் விளையாடிய அஸ்வின், 4-வது டெஸ்டில் மோசமாகப் பந்துவீசியதாலும் உடற்தகுதி காரணமாகவும் இந்த டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இப்படியாக, இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள் என்று பெருமைப்படும் அளவுக்கு ஆரம்பித்த டெஸ்ட் தொடர், கடைசி டெஸ்டில் ஒரு தமிழக வீரரும் இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


