2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாலிவுட் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறாரா விராட் கோலி? உண்மை நிலவரம் என்ன?

அந்த போஸ்டரை நன்குப் பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும். கோலியின் டி ஷர்ட்டில்...

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 7:11 am

எழில்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இன்று ஓர் தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அறிமுகமாகிறேன் என்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். டிரெய்லர் என்கிற படத்தில் கோலி நடிப்பது போன்று அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இது உண்மையிலேயே படத்தின் விளம்பரமா, அதில் கோலி கதாநாயகனாக நடிக்கிறாரா அல்லது ஏதாவது ஒரு விளம்பரமா என்கிற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அந்த போஸ்டரில் வெளியீட்டுத் தேதி என செப்டம்பர் 28-ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த போஸ்டரை நன்குப் பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும். கோலியின் டி ஷர்ட்டில் இடம்பெற்றுள்ள லோகோவும் படத்தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவும் ஒன்று. wrogn production என்கிற ரெடிமேட் ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ அது. அந்த ஆடை நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் கோலி உள்ளார்.  எனவே இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதையே இதுபோல வித்தியாசமாகத் தெரிவித்துள்ளார் கோலி என்று அறியலாம்.

கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபடவே கோலிக்கு நேரம் அமைவதில்லை. அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்கிறார். இந்நிலையில் அவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இப்போதைக்குக் கிடையாது. எனினும் அவர் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். அதன் ஒரு பகுதிதான் இந்த போஸ்டர் விளம்பரம் என்று தெரியவருகிறது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.