புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நினைவுகள்...: 1999 உலகக் கோப்பை-சாம்பியன் ஆஸ்திரேலியா

ஏழாவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 1999 போட்டிகள் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்தின.

News image
Updated On :25 ஏப்ரல் 2019, 1:53 am

சுஜித்குமார்


ஏழாவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 1999 போட்டிகள் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்தின. மொத்தம் 12 அணிகள் இடம் பெற்ற இதில் 42 ஆட்டங்கள் ஆடப்பட்டன. குரூப் பிரிவில் தலா 6 அணிகள் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடஙகளைப் பெற்ற  அணிகள் சூப்பர் சிக்ஸ் பிரிவுக்கு தகுதி பெற்றன.
குரூப் ஏ பிரிவைச் சேர்ந்த குவாலிஃபையர் குரூப் பியில் உள்ள குவாலிஃபையர் அணியுடன் மோதியது. சூப்பர் சிக்ஸ் பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்திய ஆட்டங்கள்: குரூப் பிரிவில் தென்னாப்பிரிக்காவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அதே நேரத்தில் இங்கிலாந்த 63 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 157 ரன்களிலும், கென்யாவை 94 ரன்களிலும், வென்றது.
சூப்பர் சிக்ஸ் பிரிவு: சூப்பர் சிக்ஸ் பிரிவுக்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே, இந்தியா உள்ளிட்டவை தகுதி பெற்றன.  இதில் ஆஸ்திரேலியாவிடம் 77 ரன்கள் வித்தியாசத்திலும், நியூஸிலாந்திடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும், தோல்வியுற்ற இந்தியா, பாகிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் அரையிறுதிக்கு நியூஸிலாந்து-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா ஆகியவை தகுதி பெற்றன.
இதில் நியூஸிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் (நியூஸி 341-7, பாகிஸ்தான் 242-1) என வென்று பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதி ஆட்டம் "டை' ஆனது. (ஆஸி. 213), தென்னாப்பிரிக்கா 213) ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. சூப்பர் சிக்ஸ் பிரிவில் அதிக ரன் சராசரி பெற்றதன் காரணமாக ஆஸ்திரேலியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது (பாகிஸ்தான் 132, ஆஸ்திரேலியா 133-2).

அதிக ரன்கள் எடுத்தவர் -ராகுல் திராவிட் 
(இந்தியா-461).
அதிக விக்கெட் எடுத்தவர் -ஜெப் அலாட் 
(நியூஸிலாந்து-20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.