ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய ஸ்மித், லயன்! 

ஐசிசியின் சமீபத்திய டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித், லயன் ஆகிய இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய ஸ்மித், லயன்! 

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை 251 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

இருநாடுகளுக்கு இடையில் பாரம்பரியாக ஆஷஸ் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முதல் டெஸ்ட் ஆட்டம் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸிஸ் ஆஸ்திரேலியா 284, இங்கிலாந்து 374 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. தடுமாற்றதில் இருந்த ஆஸி. அணியை ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி முதல் இன்னிங்ஸில் சரிவில் இருந்து மீட்டார். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி ஆஸி. அணி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. இதிலும் ஸ்மித் 142 ரன்களையும், மேத்யூ வேட் 110 ரன்களையும் விளாசினர். 487/7 ரன்களுடன் 2-ஆவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸி. 398 ரன்கள் வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியால், ஆஸி. வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 52.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6-49 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 4-32 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டை 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

இதையடுத்து ஐசிசியின் சமீபத்திய டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித், லயன் ஆகிய இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

பேட்ஸ்மேன் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 3-ம் இடம் பிடித்துள்ளார் ஸ்மித். விராட் கோலி முதல் இடத்திலும் வில்லியம்சன் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். பந்துவீச்சுத் தரவரிசையில் லயன் 6 இடங்கள் முன்னேறி, 13-ம் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 898 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com