பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

நோ பால் முடிவு இனி 3-ம் நடுவர் கையில்: புதிய முயற்சியில் ஐசிசி!

நோல் பால் தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் உருவாவதால் இனிமேல் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது ஐசிசி...

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 9:06 am

எழில்

நோல் பால் தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் உருவாவதால் இனிமேல் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது ஐசிசி.

அடுத்த 6 மாதங்களில் குறிப்பிட்ட ஆட்டங்களில் இதுதொடர்பான ஒத்திகையைப் பார்க்கவுள்ளது ஐசிசி. இதன்படி பந்துவீசிய சில நொடிகளில் தொலைக்காட்சி முன்பு அமர்ந்துள்ள 3-வது நடுவருக்கு அக்காட்சி அளிக்கப்படும். அதன் அடிப்படையில் நோ பாலா இல்லையா என்பதை 3-ம் நடுவர் முடிவெடுப்பார். ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் இந்த ஒத்திகை பார்க்கப்படும். கடந்த வருடம் 80 மையங்களில் ஒருநாள், டி20 ஆட்டங்கள் நடைபெற்றன. அத்தனை மையங்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என ஐசிசி பரிசீலித்து வருகிறது. ஐசிசிக்கு இந்த ஒத்திகையில் திருப்தி ஏற்பட்டால் சர்வதேச ஒருநாள், டி20 ஆட்டங்களில் இந்த நடைமுறை இனி கட்டாயமாக்கப்படும். 

சமீபத்தில் ஐபிஎல் போட்டியிலும் உலகக் கோப்பைப் போட்டியிலும் நோ பால் தொடர்புடைய சர்ச்சைகள் ஏற்பட்டன. இனிமேல் நோ பால் தொடர்பான சர்ச்சைகள் ஏற்படாது என நம்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.