கடந்த உலகக் கோப்பையுடன் ரவிசாஸ்திரி மற்றும் சக பயிற்சியாளர்கள் பணிக்காலம் முடிவுற்றது. எனினும் மே.இ.தீவுகள் தொடர் நடந்து வருவதால், ரவிசாஸ்திரி மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமித்து கபில்தேவ் தலைமையிலான சிஏசி அறிவித்தது.
இந்நிலையில், துணை பயிற்சியாளர் பணியிடங்களை சீனியர் தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தேர்வு செய்கிறது. இதில் சரண்தீப் சிங், ககன் கோடா, ஜதின் பரன்ஜாபி மற்றும் தேவங் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான நேர்காணல் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
பேட்டிங் பயிற்சியாளராக 14 பேரும், பந்துவீச்சு பயிற்சியாளராக 12 பேரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக 9 பேரும் விண்ணப்பத்திருந்தனர். இவர்களில் 3 பதவிகளுக்கும் தலா 3 பேரை தேர்வு செய்து பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ராத்தோர், சஞ்சய் பாங்கர் மற்றும் மார்க் ராம்பிரகாஷ் ஆகியோரும், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பரஸ் மாம்ப்ரே மற்றும் வெங்கடேஷ் பிராசத் ஆகியோரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர், அபய் ஷர்மா மற்றும் டி.திலிப் ஆகியோரும் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நிர்வாக இயக்குநர், ஃபிஸியோதெரஃபிஸ்ட், ஸ்ட்ரென்த் அண்ட் கண்டீஷனிங் உள்ளிட்ட இதர பிரிவுகளுக்கான இறுதி பட்டியலும் தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ளவர்களிடம் அடுத்தகட்ட நேர்காணல் நடத்தப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கான நபர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவையான விமர்சனங்களையே பெற்ற எல்ஐகே!
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |

ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


