நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய அணியில் இடமில்லை: பாக். வீரருக்கு மாற்றாக இங்கிலாந்து உள்ளூர் அணியில் இடம்பிடித்த முரளி விஜய்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே.இ.தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் இடம்பெறவில்லை. 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2019, 7:40 am

Raghavendran

துவக்க வீரர் முரளி விஜய் (35) இங்கிலாந்தின் உள்ளூர் சோமர்செட் கௌன்டி அணியில் இடம்பிடித்துள்ளார். காயம் மற்றும் ஆட்டத்திறன் குறைபாடு காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த துவக்க வீரர் முரளி விஜய், சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே.இ.தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் இடம்பெறவில்லை. இந்நிலையில், நடப்பு சீசனில் 3 போட்டிகளுக்காக சோமர்செட் கௌன்டி அணியில் விளையாட பாகிஸ்தான் வீரர் அசார் அலிக்கு பதிலாக ஒப்பந்தமாகியுள்ளார். 

சோமர்செட் மிகச்சிறந்த கௌன்டி அணியாகும். அதில் இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டிகளில் நிச்சயம் சாதிக்க முயற்சி செய்வேன். அந்த அணியின் வெற்றிக்கு முழு பங்களிப்பை அளிப்பேன் என்று முரளி விஜய் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கௌன்டி சாம்பியன்ஷிப் தொடரில் எஸக்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய், 64.60 சராசரியுடன் 320 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.