காயம் காரணமாக உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறி இந்திய அணியைத் தவிக்கவிட்ட ஷிகர் தவன், காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு முன்பு போல் ரன்களை எடுக்கவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்று டி20 ஆட்டங்களில் 27 ரன்களும் இரு ஒருநாள் ஆட்டங்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.
இதையடுத்து மீண்டும் ரன்கள் குவித்து ஃபார்முக்கு வருவதற்காக இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற ஒருநாள் தொடரின் கடைசி இரு ஆட்டங்களுக்கு ஷிகர் தவன் தேர்வாகியுள்ளார். காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார் விஜய் சங்கர்.
வியாழன் அன்று நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.கடைசி இரு ஆட்டங்கள் செப்டம்பர் 4 மற்றும் 6 அன்று நடைபெறவுள்ளன.
கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணி:
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவன், ஷுப்மன் கில், பிரசாந்த் சோப்ரா, அன்மோல்ப்ரீத் சிங், ரிக்கி பூய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஷிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் போரெல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


