இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இன்று முதல் டி20 தொடர் தொடங்கவுள்ளது. ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:
டி20 கிரிக்கெட்டில் நாம் நன்றாக இலக்குகளை விரட்டுகிறோம் எனும்போது முதலில் பேட்டிங் செய்கிற போதும் நன்கு விளையாட வேண்டும். வெற்றிக்கான சில யோசனைகள் என்னிடம் உள்ளன. அதை கோலி, சாஸ்திரியிடம் பகிர்ந்துகொள்வேன். நாம் நிறைய டி20 ஆட்டங்களை விளையாடவில்லை. உலகக் கோப்பை ஆரம்பிக்கும் சமயத்தில் அதிக ஆட்டங்களில் விளையாடி, போட்டிக்குத் தயாராக இருப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்கு விளையாடுவது தான் நம் லட்சியம். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடினோம். நியூஸிலாந்தில் நன்கு விளையாடக் கூடிய அணி நம்மிடம் உண்டு. உலகின் சிறந்த டெஸ்ட் அணியாக உள்ள நம்முடைய இலக்கு எல்லா இடங்களிலும் நன்கு விளையாடும் அணியாக இருப்பதுதான் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


