
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்து வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் 19 ரன்கள் எடுத்த இந்தியக் கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்துள்ள வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 69 இன்னிங்ஸில் 2,563 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 95 இன்னிங்ஸில் 2,562 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
கடந்த சில டி20 தொடர்களாகவே ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் முதலிடத்தை மாறி மாறி பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.