பிரபல செஸ் வீரர், விஸ்வநாதன் ஆனந்த், மைண்ட் மாஸ்டர் என்கிற சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.
டிசம்பர் 11 அன்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஆனந்த். அன்றைய தினம் இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000-ம் ஆண்டில், முதல்தடவையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று சாதனை செய்தார்.
இந்நிலையில் எழுத்தாளர் சூசன் நினனுடன் இணைந்து விஸ்வநாதன் ஆனந்த் எழுதியுள்ள மைண்ட் மாஸ்டர் என்கிற அவருடைய சுயசரிதை நூல் நாளை வெளியாகிறது. இதன் விலை - ரூ. 419. ஹேசட் இந்தியா பதிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், வரும் வெள்ளியன்று சென்னையில் இந்தப் புத்தகம் குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


