டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :19 டிசம்பர் 2019, 3:27 pm

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த மாதம் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறினார். இதனால், அந்த அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பத் தொடங்கியது.

இந்நிலையில், ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருவதற்கு மத்தியில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாதியா பிடிஐ பேசுகையில்,

"வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ராகுலைக் கேப்டனாக நியமிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரை விமரிசித்த விமர்சகர்களுக்கு அவர் பதிலடி தந்துள்ளார். பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அவருடையத் திறனைப் பார்ப்பீர்கள். அவர் எங்களுடைய ஒருமித்தத் தேர்வாகவே இருந்தார்" என்றார்.

2018-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன் கேஎல் ராகுல் ரூ. 11 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குத் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.