பல டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்குள் முடிந்துவிடுவதால் ஐந்து நாள்களுக்கு நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாள்களாகச் சுருக்க ஐசிசி யோசனை செய்து வருகிறது.
2023 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து நான்கு நாள் டெஸ்டைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் டி20 போட்டிகள், பிசிசிஐ திட்டமிடும் நான்கு நாடுகள் போட்டி, டெஸ்ட் தொடருக்கு உண்டாகும் செலவுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஐசிசி எடுக்கவுள்ளது. இதன்மூலம் பல நாள்கள் கூடுதலாகக் கிடைக்கும். அதைவைத்து வேறு போட்டிகளை நடத்திக்கொள்ளலாம் என்பது ஐசிசியின் வருங்காலத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. உதாரணமாக 2015 முதல் 2023 வரையிலான டெஸ்ட் தொடர்களை நான்கு நாள்களாகச் சுருக்கினால் 335 நாள்கள் மிச்சமாகும். இதனைக் கொண்டு கூடுதலாக ஒருநாள், டி20 ஆட்டங்களை நடத்தலாம். மேலும் 4 நாள்கள் டெஸ்ட் எனும்போது கூடுதலாகவும் டெஸ்ட் ஆட்டங்களை விளையாட முடியும் என்பதும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. நான்கு நாள் டெஸ்ட் என்றால் நான்கு டெஸ்டுகளுக்குப் பதிலாக ஐந்து டெஸ்டுகளை நடத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி, நான்கு நாள் டெஸ்ட் கட்டாயமாக்கப்படும் பட்சத்தில் ஒருநாளைக்குக் குறைந்தது 90 ஓவர்கள் வீசவேண்டும் என்கிற விதிமுறை மாற்றப்பட்டு 98 ஓவர்களாக அதிகரிக்கப்படும். இதன்மூலம் 58 ஓவர்களை மட்டுமே இழக்க நேரிடும். கூடுதல் ஓவர்களை வீசுவதன் மூலம் டெஸ்ட் முடிவுகளில் பாதகம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
2018 முதல் 60 சதவிகித டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்குள் முடிந்துவிடுவதால் இந்தப் புதிய நடைமுறையைக் கட்டாயமாக்க ஐசிசி தீவிரமாக யோசித்து வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரு நான்கு நாள் டெஸ்ட் ஆட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே, இங்கிலாந்து - அயர்லாந்து. அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா நான்கு நாள் டெஸ்டில் விளையாடவுள்ளது. இதனால் நான்கு நாள் டெஸ்ட் கட்டாயமாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


