தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து மகளிர் அணி

இந்த ஆட்டத்திலும் மிதாலி ராஜுக்கு இடமில்லை, இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியில்லை... 

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 5:40 am

எழில்

இந்த ஆட்டத்திலும் மிதாலி ராஜுக்கு இடமில்லை, இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியில்லை. கடைசியில் தொடரை இழந்ததுதான் மிச்சம்.

ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்திலும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் தொடக்க வீராங்கனையாக இடம்பெற்ற பிரியா புனியா இந்த ஆட்டத்திலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த மந்தனாவும் ரோட்ரிகஸ்ஸும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் மந்தனா. அதற்கு பிறகு களமிறங்கிய வீராங்கனைகள் ஒருவர்கூட  உருப்படியாக ரன்கள் சேர்க்காமல் வெளியேறினார்கள். எனினும் ரோட்ரிகஸ் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து இந்திய அணி ஓரளவு கெளரவமான ஸ்கோரை அடைய உதவினார். இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்  எடுத்தது.

இதன்பிறகு விளையாடிய நியூஸிலாந்து மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பேட்ஸ் அபாரமாக விளையாடி 52 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 14.3 ஓவர்கள் வரை 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள்  எடுத்து வலுவான நிலையில் இருந்தபோது அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது நியூஸி. அணி. இதனால் கடைசிக்கட்டம் பரபரப்பாக அமைந்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ஜோஷி வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் மார்டின். இதன்பிறகு கடைசிப் பந்தில் தேவைப்பட்ட 1 ரன்னை எடுத்து 2-வது டி20 ஆட்டத்தையும் தொடரையும் வென்றது நியூஸிலாந்து மகளிர் அணி. இந்திய மகளிர் அணி சிறப்பாக ஃபீல்டிங் செய்து, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியிருந்தால் இந்த ஆட்டத்தை வென்றிருக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.