அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

நியூஸி.க்கு எதிரான கடைசி டி20 தோல்வி: தினேஷ் கார்த்திக் விளக்கம்

நியூஸிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் ரன்

News image
Updated On :14 பிப்ரவரி 2019, 1:09 am IST


நியூஸிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் தினேஷ் கார்த்திக் தவிர்த்தது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. 20ஆவது ஓவரை டிம் சௌதி விசினார்.
முதல் பந்தில் 2 ரன் எடுத்த தினேஷ், 2ஆவது பந்தை அடிக்கவில்லை. 3 ஆவது பந்தில் ரன் எடுக்கவில்லை. எஞ்சிய 3 பந்துகளில் 14 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது.
3 ஆவது பந்தில் பாதி தூரம் ஓடிவந்த க்ருணால் பாண்டியாவை திரும்பி போகுமாறு சைகை காட்டி அனுப்பினார் தினேஷ். 4ஆவது பந்தில் தினேஷும், 5ஆவது பந்தில் க்ருணாலும் தலா 1 ரன் எடுத்தனர்.
6ஆவது பந்து ஒய்டாக வீசப்பட்டது. பின்னர் மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தில் தினேஷ் சிக்ஸர் அடித்தார். எனினும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. அது குறித்து தினேஷ் கார்த்திக் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், க்ருணாலும், நானும் சிறப்பாக விளையாடினோம். எதிரணியின் பந்துவீச்சாளர்கள் கடினமான சூழலில் இருந்தபோது நாங்கள் ஆட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றோம்.  சிக்ஸர்களை அடிப்பேன் என்று நம்பினேன்.
சில நேரங்களில் இதுபோன்று ஆகிவிடும். டிம் சௌதி சிறப்பாக பந்து வீசினார். ஒரு சிறிய தவறை அவர் இழைத்திருந்தாலும் நாங்கள் வெற்றி பாதைக்கு அணியை அழைத்துச் சென்றிருப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.