ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை அளித்த இந்திய ஏ அணி!

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது...

News image
Updated On :15 பிப்ரவரி 2019, 9:33 am

எழில்

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

மைசூரில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. முதல் நாளன்று இந்திய ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய ஏ அணி, 114.4 ஓவர்களில் 392 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்வரிசைகள் வீரர்கள் தவிர நடுவரிசை, பின்வரிசை வீரர்களில் விக்கெட் கீப்பர் பரத்தைத் தவிர இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பரத் 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் சேப்பல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, 48.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் சைனி, நதீம் தலா 3 விகெட்டுகளும் ஆரோன், ஜலஜ் சக்ஸேனா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி 2-ம் நாளின் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில்விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. அந்த அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 228 ரன்கள் பின்தங்கியிருந்தது. 

இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணி இன்று 2-வது இன்னிங்ஸில் 53.3 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய ஏ அணி ஒரு இன்னிங்ஸ் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய ஏ தரப்பில் மார்கண்டே 5 விக்கெட்டுகளும் ஜலஜ் சக்ஸேனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்கள். 

2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய ஏ அணி 1-0 என வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.