இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த நியூஸிலாந்து வீரர்: ராஸ் டெய்லர் சாதனை!

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார் நியூஸிலாந்தின் பிரபல வீரர் ராஸ் டெய்லர்.

News image
Updated On :20 பிப்ரவரி 2019, 9:26 am

எழில்

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார் நியூஸிலாந்தின் பிரபல வீரர் ராஸ் டெய்லர்.

8007 ரன்கள் எடுத்து சாதித்திருந்த ஸ்டீபன் பிளமிங்கைப் பின்னுக்குத் தள்ளி, அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த நியூஸி. வீரர் என்கிற பெருமையை இன்று அடைந்துள்ளார் டெய்லர்.

280 ஒருநாள் ஆட்டங்களில் பிளமிங் எடுத்த 8007 ரன்களை 218 ஆட்டங்களில் அவர் எட்டியுள்ளார். 2017 முதல் 5 சதங்களும் 14 அரை சதங்களும் எடுத்து அட்டகாசமான ஃபார்மில் உள்ளார் டெய்லர். அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த நியூஸி. வீரர்களின் பட்டியலில் 6440 ரன்களுடன் மார்டின் கப்தில் 4-ம் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, டெஸ்டிலும் பிளமிங்கின் சாதனையை முறியடிக்கவுள்ளார் டெய்லர். 7172 ரன்களுடன் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த நியூஸி. வீரர் என்கிற பிளமிங்கின் சாதனையைத் தாண்ட டெய்லருக்கு இன்னும் 649 ரன்களே தேவை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.