தமிழ்நாடு 125/6 (சதுர்வேத் 34, வாஷிங்டன் 33, நாக்வஸ்வல்லா 3-11); குஜராத் 124 (காந்தி 68, வாஷிங்டன் 2-10)
சூரத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் குஜராத் அணியைத் தமிழக அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
டாஸ் வென்ற குஜராத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சதுர்வேத் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். குஜராத்தின் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தமிழக அணி சிறப்பாகப் பந்துவீசியதால் குஜராத் அணி 16.5 ஓவர்களில் 96 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தமிழக அணி எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவானது. ஆனால் கடைசி விக்கெட்டை எடுக்கவிடாமல் காந்தி தமிழக அணிக்குக் கடுமையான நெருக்கடி அளித்தார். இந்நிலையில் கடைசி ஓவரில் கடைசி பேட்ஸ்மேன் படேலை ரன் எதுவுமின்றி ரன் அவுட் செய்து 1 ரன் வித்தியாசத்தில் வென்றது தமிழக அணி. குஜராத் அணி, 19.5 ஓவர்களில் 124 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற காந்தி, 68 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் கடுமையாகப் போராடினார். தமிழக அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views

வியக்கவைக்கும் கருப்பு பட வசூல்! சூர்யாவின் நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி!

இன்றைய செய்திகள்! நேரலை
விடியோக்கள்

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!



