ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஈஸ்ட் பெங்கால்-எஃப்சி அய்ஸால் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் முதன்முறையாக பட்டம் வெல்லும் ஈஸ்ட் பெங்கால் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.
முல்ஹீம் அன்டர் ரூர் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ், வீராங்கனைகள் மேக்னா-பூர்விஷா, வெங்கட் கெளரவ் பிரசாத்-ஜுஹி தேவன்கன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
வரும் புதன்கிழமை துபையில் ஐசிசி சார்பில் நடக்கவுள்ள கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு பதில் தர ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களின் போது, மகளிர் ஐபிஎல் காட்சிப் போட்டிகளை, நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மகளிர் ஐபிஎல் போட்டிகளிலும் பிரபலப்படுத்த பிசிசிஐ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சூரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சையத் முஷ்டாக் டி20 ஆட்டத்தில் குஜராத்தை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது தமிழகம். முதலில் ஆடிய குஜராத் 124-க்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய தமிழகம் 125/6 ரன்களுடன் வெற்றி பெற்றது. (சதுர்வேதி 34, வாஷிங்டன் சுந்தர் 33).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


