காயத்திலிருந்து மீண்டு வந்த சாஹா, டி20 ஆட்டத்தில் சதமடித்தார்!
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா சதமடித்து அசத்தியுள்ளார்.


சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா சதமடித்து அசத்தியுள்ளார்.
கடந்த வருடம், 33 வயது விக்கெட் கீப்பரான சாஹாவுக்குத் தோளில் காயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் நிலைமை மோசமடைந்தது. இதனால் அவரால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை. பிறகு, சாஹாவுக்குத் தோள்பட்டைக் காயத்துக்கான அறுவை சிகிச்சை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் காயத்திலிருந்து மீண்ட சாஹா, மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் பங்கேற்று வருகிறார்.
கட்டாக்கில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்கால் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய சாஹா, 62 பந்துகளில் 4 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். விவேக் சிங் 19 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய அருணாசல பிரதேச அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டும் எடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இது சாஹாவின் 2-வது டி20 சதம். இதற்கு முன்பு 2014 ஐபிஎல் இறுதிச்சுற்றில் சதமடித்தார் சாஹா. இந்திய அணியில் மீண்டும் தேர்வாவதற்கு முயன்று வரும் சாஹா, இந்தச் சதத்தின் மூலம் தேர்வுக்குழுவின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...