இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, ரிஷப் பந்த் 159 ரன்களை குவித்தனர்.
தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்தினார். இந்திய அணி ஆஸி.யை விட 322 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் விடுத்தது.
இந்நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. போட்டியின் இடையே மழை பெய்ததால் போதிய வெளிச்சமின்மை காரணமாக அவ்வப்போது தடை ஏற்பட்டு 4-ஆம் நாள் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
கடைசி நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்தியா வெற்றிபெற இன்னும் 10 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. மிகவும் பரபரப்பான கட்டத்தில் இந்தப் போட்டியின் நிலை உள்ளது. ஆனால், 5-ஆம் நாளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1947-48-இல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இருப்பினும் இந்தத் தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளதால், தற்போது அந்த சாதனையைப் படைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


