தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாகிஸ்தானுடனான 2-ஆவது டெஸ்டிலும் வெற்றி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 

News image

புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

Updated On :6 ஜனவரி 2019, 12:05 pm

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 294 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்நிலையில், வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய ஆம்லா 2 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக ரிடயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு, எல்கர் மற்றும் கேப்டன் டு பிளெசிஸ் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி பெறச் செய்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்கர் 24 ரன்களும், டு பிளெசிஸ் 3 ரன்களும் எடுத்தனர். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த டு பிளெசிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இரு அணிகளுக்கிடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் வரும் 11-ஆம் தேதி தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.