சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

ஒருநாள் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பறந்த தோனி, ரோஹித் சர்மா!

ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக தோனி, ரோஹித் சர்மா, ஜாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் சென்றுள்ளார்கள்...

News image
Updated On :7 ஜனவரி 2019, 10:33 am

எழில்

ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக தோனி, ரோஹித் சர்மா, ஜாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் சென்றுள்ளார்கள்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் டிரா ஆனதையடுத்து டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்கிற பெருமையும் கிடைத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 12 முதல் தொடங்குகிறது. இதற்காக தோனி, ரோஹித் சர்மா, கெதர் ஜாதவ் ஆகிய மூன்று பேரும் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்துள்ளார்கள். இத்தகவலைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் ஜாதவ். டெஸ்ட் தொடரில் இடம்பெறாத இந்திய ஒருநாள் அணி வீரர்கள் நாளை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றடைவார்கள் என அறியப்படுகிறது. 

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் (சிட்னி): ஜனவரி 12 - காலை 7.50* முதல்
2-வது ஒருநாள் (அடிலெய்ட்): ஜனவரி 15 - காலை 8.50* முதல்
3-வது ஒருநாள் (மெல்போர்ன்): ஜனவரி 18 - காலை 7.50* முதல்

* இந்திய நேரம் 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.