இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி
சிட்னியில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.
முதல் ஒருநாள் போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு:
இந்திய அணி விவரம்:
ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கரே, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ஹை ரிச்சர்ட்சன், ஜேசன் பெர்ஹென்டர்ப்.
பிக் பேஷ் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக மூத்த வீரர் பீட்டர் சிடில் அபாரமாக ஆடி வருவதால், 8 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


