இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய அனுபவ வீரர் ஷான் மார்ஷ் சதம் விளாசினார். 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 48 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
299 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோஹித் 43, தவன் 32, ராயுடு 24 ரன்கள் சேர்த்தனர்.
கேப்டன் கோலி 74 ரன்களுடனும், தோனி 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் இப்போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


