3-வது ஒருநாள்: அணித் தேர்வில் திடீரென இரு மாற்றங்களைச் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி!
கடைசி ஒருநாள் ஆட்டத்துக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ளன...


டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அடுத்ததாக, ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றுவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு அதைவிடவும் பெரிய சங்கடம் எதுவுமில்லை. மெல்போர்னில் மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.
இதனால் கடைசி ஒருநாள் ஆட்டத்துக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்டாஃப் காயம் காரணமாக விலகியுள்ளார். நாதன் லயன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்விருவர்களுக்குப் பதிலாக ஆடம் ஸம்பாவும் பில்லி ஸ்டேன்லேக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும் முன்னேற்பாடாக, வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இந்த மாற்றங்களின்மூலம் கடைசி ஒருநாள் ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரையும் வெல்ல ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது. கடைசியாக விளையாடிய 23 ஒருநாள் ஆட்டங்களில் நான்கு ஆட்டங்களில் மட்டுமே ஆஸி. அணி வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...