ஆட்ட நாயகன் விருது பெற்ற உமேஷ் யாதவ்: அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா!
ரஞ்சிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் உத்தரகண்ட்டை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது விதர்பா அணி...


ரஞ்சிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் உத்தரகண்ட்டை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது விதர்பா அணி.
நாகபுரியில் நடைபெற்ற காலிறுதியில் டாஸ் வென்ற விதர்பா அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய உத்தரகண்ட் அணி 108.4 ஓவர்களில் 355 ரன்கள் எடுத்தது. செளரப் ராவத் 108 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 184 ஓவர்களில் 629 ரன்கள் குவித்தது. வாசிம் ஜாஃபர் 206 ரன்கள் எடுத்து அசத்தினார். சஞ்சய் ராமசாமி 141 ரன்களும் ஆதித்யா சர்வேட் 102 ரன்களும் எடுத்தார்கள். இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது உத்தரகண்ட். உமேஷ் யாதவும் சர்வேட்டும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இன்று 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் என ஆரம்பித்த உத்தரகண்ட் அணி, 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 8 ஓவர்களில் வேலையை முடித்து வெற்றி கண்டது விதர்பா அணி. இந்த ஆட்டத்தில் மொத்தமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அரையிறுதியில் கேரளாவைச் சந்திக்கிறது விதர்பா அணி. கடந்த வருட காலிறுதியில் இரு அணிகளும் மோதியதில் 412 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது விதர்பா அணி. பிறகு ரஞ்சிக் கோப்பையையும் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...