நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்பதிலிருந்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்தது.
துணை கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆட்டங்களில் அணிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு பல்வேறு போட்டிகளில் அணியை வழிநடத்தியதால் ஓய்வு தேவை இருக்கும் என்று கருதி தேர்வுக் குழுவும், நிர்வாகமும் இந்த முடிவை எடுத்தது என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதிலிருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
உலகக் கோப்பை போட்டி பிரிட்டனில் மே மாதம் முதல் ஜூலை வரை நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் பல போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் களைப்படையும் சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
நியூஸிலாந்து சுற்றுப் பயணத்துக்கு பிறகு, ஆஸ்திரேலியாவுடன் 5 ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியா மோதவுள்ளது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஐபிஎல் திருவிழா தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்மொழிக் கல்வி: சிபிஎஸ்இ சுற்றறிக்கையைத் திரும்பப் பெற அண்ணாமலை வலியுறுத்தல்

ரூ. 500 ஓய்வூதியத்துக்காக 90 வயது மாமியாரை 4 கி.மீ. தூக்கிச் சுமந்துவந்த பெண்! - விடியோ

சிபிஎஸ்இ தளத்தில் பயங்கர குளறுபடிகள்! தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வலுக்கும் குரல்!







