சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்: இரண்டாவது சுற்றில் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த்

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் வெற்றி பெற்றனர். 

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:11 am IST


இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் வெற்றி பெற்றனர். 
சீன வீராங்கனை லீயை எதிர்கொண்ட சிந்து, 22-24, 21-8, 21-17 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியாவை வியாழக்கிழமை எதிர்கொள்கிறார்.
இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 7-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் உள்ளூர் வீராங்கனை தினார் டயா அயூஸ்டீனை வீழ்த்தினார்.
முதல் செட்டை பறிகொடுத்த சாய்னா, பின்னர் சுதாரித்துக் கொண்டு அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட் ஆட்டம் கடும் சவால் அளிக்கும் வகையில் இருந்தது.
மூன்றாவது செட் ஆட்டத்தையும் சாமர்த்தியமான தனது சர்வீஸ்களால் 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இதுவரை தினார் டயாவுடன் 3 ஆட்டங்களில் மோதியுள்ள சாய்னா, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த சுற்று ஆட்டத்தில் மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனை ஃபிட்ரியானியை சந்திக்கிறார் சாய்னா.
ஸ்ரீகாந்த் வெற்றி: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மலேசியாவின் சாங்கை 21-12, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மனு அட்டாரி ஜோடி, 14-21, 21-19, 21-15 என்ற செட் கணக்கில் டென்மார்க் இணையை வீழ்த்தியது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.