வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

புதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ள மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் 

நிகோலஸ் பூரான், ஃபெபியன் ஆலன், ஒஸானே தாமஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஒப்பந்தம் வழங்கியுள்ளது...

News image
Updated On :9 ஜூலை 2019, 11:54 am

எழில்

நிகோலஸ் பூரான், ஃபெபியன் ஆலன், ஒஸானே தாமஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஒப்பந்தம் வழங்கியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம். 

அதேபோல அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒப்பந்தம் டேரன் பிராவோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தம் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால், ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஸப், கெமர் ரோச் ஆகிய வீரர்களுக்குக் கிடைத்துள்ளது.

கடந்த முறை ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷு, மிகல் கம்மின்ஸ், ஆஷ்லி நர்ஸ், கிரான் பவல், ரேமான் ரீஃபர் ஆகிய வீரர்களுக்கு இந்தமுறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 2019-20 ஆண்டுக்கான ஒப்பந்தம்

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகள்: பிராவோ, ஹெட்மையர், கீமோ பால், ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஸப், கெமர் ரோச்.
டெஸ்ட்: கிரைக் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பல், ராஸ்டன் சேஸ், ஷேன் டெளரிச், ஷெனான் கேப்ரியல், ஜோமல் வாரிகன்.
ஒருநாள் & டி20: ஃபெபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெட்ல், நிகோலஸ் பூரான், ரோவ்மன் பவல், ஒஸானே தாமஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.