தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மே.இ. தீவுகளில் இந்திய ஏ அணி அசத்தல்: ஒருநாள் தொடரை வென்றது! (ஆட்டத்தின் முழு விடியோ)

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி 3-0 என வென்றுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2019, 5:29 am

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி 3-0 என வென்றுள்ளது.

மே.இ. தீவுகளின் நார்த் சவுண்டில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 100, ஷுப்மன் கில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் ஏ அணி 34.2 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் கிருனாள் பாண்டியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மணீஷ் பாண்டேவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 

இதனால் இந்திய ஏ அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது. அடுத்த இரு ஒருநாள் ஆட்டங்கள் வரும் வெள்ளியன்றும் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.