தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அலெக்ஸ் கேரிக்கு இடமில்லை: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இந்த ஆஸி. அணியில் 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்... 

News image
Updated On :26 ஜூலை 2019, 12:20 pm

எழில்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பான்கிராப்ட், மேத்யூ வேட், மிட்செல்ட் மார்ஷ் ஆகியோர் 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். இந்த ஆஸி. அணியில் 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். நியூலேண்ட் டெஸ்டில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாகத் இடைக்காலத்தடையை எதிர்கொண்ட ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகிய மூவரும் மீண்டும் ஒன்றாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். எனினும் உலகக் கோப்பைப் போட்டியில் அற்புதமாக விளையாடிய அலெக்ஸ் கேரிக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஆஷஸ் தொடர், ஆகஸ்ட் 1 முதல் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் தொடங்கவுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி

டிம் பெயின் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், கேம்ரான் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிட் ஹெட், மாத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சான், மிட்செல் மார்ஷ், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், பீட்டர் சிட்டில், ஜோஸ் ஹேஸில்வுட், நாதன் லயன், மைக்கேல் நசீர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.