முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நடிகர்களைக் கீழ்த்தரமாக விமரிசித்து அதை ட்விட்டரில் டிரெண்ட் ஆக்குவதா?: கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாடல்!

இளம் ரசிகர்களின் இந்தப் போக்கைக் கண்டித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்...

News image
Updated On :29 ஜூலை 2019, 7:22 am

எழில்

RIPactorVIJAY என்றொரு ஹேஷ்டேக் சமீபத்தில் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது. வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்கள் தங்களுடைய போட்டி நடிகர்களை அவமரியாதை செய்யும் விதமாக இதுபோன்ற ஹேஷ்டேக்குகளை அவ்வப்போது ட்விட்டரில் டிரெண்டிங் செய்வார்கள். போட்டி மனப்பான்மையுடனும் பகைமை உணர்வுடன் ட்விட்டரில் இதுபோன்ற செயல்களை அடிக்கடிக் காணமுடியும். 

இந்நிலையில் இளம் ரசிகர்களின் இந்தப் போக்கைக் கண்டித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

சில நாள்களுக்கு முன்பு விண்கற்களால் நம் பூமி தாக்கப்படாமல் தப்பித்தது. முறையற்ற பருவமழை வெவ்வேறு நகரங்களைத் தாக்கியுள்ளது. நம் நாட்டின் பல இடங்கள் வறட்சியை எதிர்கொண்டுள்ளன. நம்மைத் தொந்தரவு செய்யும் குற்றச் செயல்கள் பேசப்படுகின்றன. ஆனால் நம் மாநிலத்தின் இளைய தலைமுறை  RIPactorVIJAY என்கிற ஹேஷ்டேகை டிரெண்டிங் செய்கிறார்கள் என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.