நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2019, 11:01 am

DIN


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால், தனது மூன்றாவது சுற்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், நடால் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து, இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3 என கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, அடுத்த செட்டில் எழுச்சி கண்ட கோஃபின் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் மூன்றாவது செட்டை தன்வசப்படுத்தினார். 

ஆனால், நடால் 4-வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இதன்மூலம், 6-1, 6-3. 4-6, 6-3 என்கிற செட் கணக்கில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார். இந்த போட்டி 2 மணி நேரம் 49 நிமிடங்கள் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 4-வது சுற்றில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜூவான் இக்னாசியோ லாண்டரோவை எதிர்கொள்கிறார். 

ரஃபேல் நடால், பாரிஸில் விளையாடிய 91 போட்டிகளில் 89 போட்டிகளில் (இந்த வெற்றி உட்பட) வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.