புவனேஸ்வர் 3 போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை: விராட் கோலி

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் காயமடைந்தார்.
புவனேஸ்வர் 3 போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை: விராட் கோலி
Updated on
1 min read

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் காயமடைந்தார்.

தனது 3-ஆவது ஓவரை வீச வந்த புவனேஸ்வர் குமாருக்கு காலின் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் முடியம் வரை பந்துவீசாமல் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

புவனேஸ்வருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரியளவில் காயம் ஏற்படவில்லை. எனவே அடுத்த சில போட்டிகளுக்குள்ளாக முழு உடல்தகுதியை அடைவார் என நம்புகிறேன்.

அதிகபட்சம் 3 போட்டிகள் வரை பங்கேற்க வாய்ப்பில்லை. இந்த தொடரில் புவனேஸ்வர் மிக முக்கிய வீரராக திகழ்கிறார். பெரியளவில் பாதிப்பில்லை என்பதால் போதிய நேரத்தில் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்புவார். 

இருந்தாலும் முகமது ஷமியும் அணியில் இருப்பதால் இந்திய அணியில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com