காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி நிதியுதவி
இந்திய வீரர்களின் ஆட்ட ஊதியம் முழுவதையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கவுள்ளோம்...


கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறன. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் தொடக்க விழா எதுவும் கிடையாது. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை, புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் ராஞ்சியில் இன்று நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தின்போது விராட் கோலி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த 3-வது ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் ஆட்ட ஊதியம் முழுவதையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கவுள்ளோம். இதன்மூலம் தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும் என்று அறிவித்தார்.
மேலும் இந்த ஆட்டத்தில், இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை தரும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவத் தொப்பியை இன்று அணிந்துள்ளார்கள். இந்தத் தொப்பியை அனைத்து வீரர்களுக்கும் தோனி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...