ஒவ்வொரு டெஸ்ட் நாடும் முதல் டெஸ்ட் வெற்றியை எப்போது அடைந்தன?
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தை வென்று தனது முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி...


அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தை வென்று தனது முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
டெஹ்ராடுனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 11-வது வீரர் 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆச்சர்யம் ஏற்படுத்தினார். கடைசிவரை அவரை ஆட்டமிழக்கச் செய்யமுடியவில்லை. இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் அயர்லாந்து அணியால் 93 ஓவர்களில் 288 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.
இதனால் இந்த டெஸ்ட் ஆட்டத்தை வென்று தொடரை வெல்ல ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை 47.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. முதல் இன்னிங்ஸில் 98 ரன்கள் எடுத்த ரஹம்த் ஷா, 2-வது இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் தான் விளையாடிய 2-வது டெஸ்டில் முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
இந்நிலையில் ஒவ்வொரு டெஸ்ட் நாடும் முதல் டெஸ்ட் வெற்றியை அடைய எத்தனை டெஸ்டுகள் தேவைப்பட்டன. அதன் விவரம்:
1 ஆஸ்திரேலியா
2 இங்கிலாந்து
2 பாகிஸ்தான்
2 ஆப்கானிஸ்தான்
6 மேற்கிந்தியத் தீவுகள்
11 ஜிம்பாப்வே
12 தென் ஆப்பிரிக்கா
14 இலங்கை
25 இந்தியா
35 வங்கதேசம்
45 நியூஸிலாந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...