கவுண்ட்டி கிரிக்கெட்: அறிமுக ஆட்டத்தில் சதமடித்த ரஹானே!
ஹாம்ப்ஷையர் அணிக்காக கவுண்ட்டி கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள ரஹானே, முதல் ஆட்டத்திலேயே சதமடித்துள்ளார்...


ஹாம்ப்ஷையர் அணிக்காக கவுண்ட்டி கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள ரஹானே, முதல் ஆட்டத்திலேயே சதமடித்துள்ளார்.
நியூபோர்ட்டில் நடைபெறும் கவுண்ட்டி கிரிக்கெட் போட்டியில் ஹாம்ப்ஷையர் - நாட்டிங்ஷையர் அணிகள் மோதி வருகின்றன. ஹாம்ப்ஷையர் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் ரஹானே, தனது முதல் கவுண்ட்டி ஆட்டத்தை விளையாடுகிறார்.
முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த ரஹானே, 2-வது இன்னிங்ஸில் 197 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன்மூலம் கவுண்ட்டி கிரிக்கெட்டில் அறிமுகமான ஆட்டத்தில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
கவுண்ட்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த இந்தியர்கள்
பியூஷ் சாவ்லா - சஸ்ஸக்ஸ், 2009
முரளி விஜய் - எஸ்ஸக்ஸ், 2018
ரஹானே - ஹாம்ப்ஷையர், 2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...