கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, கங்குலி, டெண்டுல்கர், டிராவிட், லக்ஷ்மண், ஹர்பஜன் சிங், அகர்கர் என பிரபலங்கள் பலர் இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்றுள்ளார்கள். வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோரிடம் இரு அணி வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். ராணுவ பேண்ட் வீரா்களால் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
மதிய உணவு இடைவேளையின்போது, சச்சின், கங்குலி, லக்ஷ்மண், டிராவிட், கும்ப்ளே ஆகியோர் 2001 கொல்கத்தா டெஸ்ட் குறித்து தங்களுடைய நினைவுகளைக் கூறுவார்கள்.
தொடக்க நிகழ்வின் விடியோக்கள் பிசிசிஐ-யால் வெளியிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


